
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
அவற்றில் சில காமெடியாகவும், சில அவைகளின் திறமைகளைக் கண்டு வியக்கும் வகையிலும் இருக்கும்.
இந்த நிலையில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காட்டு விலங்குகளிலேயே மிகவும் வலிமை வாய்ந்தது யானை. யானைகள் எவ்வளவுக்கெவ்வளவு சாதுவோ அதே அளவு ஆபத்தானதும் கூட.
தற்போது ஏராளமான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், யானைகள் கூட்டம் கூட்டமாக மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன.
இந்த புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்த நிலையில் இரண்டு காட்டுயானைகள் செம ஆக்ரோஷத்துடன் பயங்கரமாக மோதிக் கொண்டு சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நடுநடுங்க வைத்துள்ளது.