தமிழ், தெலுங்கு என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை சமந்தா.
இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகையை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் எதேச்சியாக ஒரு சிறுமியை சந்தித்துள்ளார். அப்போது, அந்த சிறுமி தான் சமந்தாவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல், அந்த வீடியோவில் தான் சமந்தாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் குழந்தைத்தனமாக அவர் தனது ஆசையை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோவை சமந்தாவுக்கு அனுப்பிய கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு ‘உங்களுடைய தீவிர ரசிகையை நேரில் ஒருமுறை சந்தியுங்கள்’ என்று சமந்தாவிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.
No attitude , No ego , 1% kuda super star ani head weight ledhu @KeerthyOfficial ❤️ mee mansuki🙏
— Dakshak D (@DRr21924582) February 4, 2022
Btw, thaank you 🥺🤌#KeerthySuresh #samantha#samantharuthprabhu pic.twitter.com/CxUpj5yDJs
@KeerthyOfficial Insta story ❤️😍
— Bharath💘Keerthy (@bharath_ks_) February 4, 2022
Bond between @Samanthaprabhu2 and @KeerthyOfficial ❤️🥰💥#KeerthySuresh #Samantha pic.twitter.com/7KNIPZhluu