ஆசிரியர்களுக்கு சோதனை.. வேதனை.. பாடம் நடத்த விடுங்கள்: ஆசிரியர்கள் கூட்டணி!

teacher - 2026

தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு, முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பதால் கற்பித்தல் பணி பாதிக்கும் எனவும், இது தேசிய கல்விக்கொள்கையின் உட்கூறாக இருக்கிறது என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் கூறும்போது, “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்ககம் தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு, ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வியாண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. அதுவும் இக்காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறைச் சூழலுக்குக் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன.

இச்சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளும் திறக்கப்பட்டுக் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி முடிய 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ‘கற்றல் விளைவுகள்’ பயிற்சியின்போது, குடிப்பதற்கு ‘பச்சைத் தண்ணீர்’ கூட கொடுக்காத நிலை இருந்தது.

மேலும், இப்பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சிக் கட்டகத்தின் முடிவிலும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயிற்சிக்கான செலவினமும் வழங்கப்படும் எனவும் மாநில திட்ட இயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனையடையச் செய்துள்ளது.

இந்த அறிவிப்பு மாணவர்களின் கற்றல் அடைவை அறிய வகுப்பறைகளில் பல சோதனைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கே சோதனையா? அல்லது வேதனையா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்குத் தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி அடையும் வரை தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக்கொள்கை 2020இன் உட்கூறுகள் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கும் இதுபோன்ற செயல்கள் தொடங்குமானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை எதிர்த்து களத்தில் இறங்கிப்போராடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories