கே.பாலசந்தர் பவுண்டேஷன் அறக்கட்டளை குறித்து புஷ்பா கந்தசாமி விளக்கம்

Published:

pushpa-kandasamy சென்னை: மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கே.பாலசந்தர் பவுண்டேஷன் அறக்கட்டளை குறித்து அதன் நிர்வாக அறங்காவலர் புஷ்பா கந்தசாமி கூறியதாவது.. கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதைசெலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான “கவிதாலயா” விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறவிழைகிறேன். எங்களது தந்தை திரு கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் “கே.பாலசந்தர் பவுண்டேஷன்” (K. Balachander Foundation) என்ற ட்ரஸ்ட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அமைப்பிற்கு கே.பியின் குடும்ப உறுப்பினர்களான திருமதி ராஜம் பாலசந்தர், திருமதி புஷ்பா கந்தசாமி, திரு பிரசன்னா, திருமதி கீதாகைலாசம், திரு கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குனர் திரு வசந்த் சாய்ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் கீழ்க்காணும் திட்டங்களை நாங்கள் விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளோம்.

  1. கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்குகல்வி உதவி.
  2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில்சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் “Creative Excellence” விருது வழங்குதல்.

  3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப்படம்,சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.

  4. கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்ப்படுத்துதல்.

  5. கே.பி அவர்களின் மகன் மறைந்த திரு.கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்தஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.

  6. கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலானஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img