அஜித்-விஜய் ரசிகர்களிடையே மோதலை தூண்டிவிடும் ‘கங்காரு’ படம்..!

Published:

vijay-ajithவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ‘கங்காரு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக பிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்குநர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். ‘கங்காரு’ படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி. படத்தில் பிரியங்கா தல அஜீத்தின் ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை, பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக் கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை ஐந்து நிமிடங்களுக்கு நீடிக்கிறதாம். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘கங்காரு’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி 150 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img