காதலர் தினம் வேண்டாம்.. ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்!

Published:

lovers day - 2026

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு காதலர் தினம் தேவையில்லை ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 14 உலக காதலர் தினம் என கொண்டாடப்படுகிறது. இந்திய பண்பாட்டுக்கு எதிரான அயல்நாட்டு கலாச்சாரத்தை உள்நுழைக்கும் இந்த கொண்டாடட்த்தை பலரும் எதிர்க்கின்றனர்.

காதலர் தினத்தன்று பள்ளி படிக்கும் மாணக்கர்கள் முதல் பல்வேறு வயதினரும் கொண்டாட்டம் என்ற பெயரில் டேட்டிங் செல்வது, திருமணத்திற்கு முன்பே தவறான உறவில் ஈடுபடுவது, வீட்டிற்கு தெரியாமல் பள்ளி சிறார்கள் தாலி கட்டிக் கொள்வது போன்ற இந்திய பண்பாட்டிற்கு எதிரான விஷயங்கள் நடக்கின்றன. புனித காதலையும் சேர்த்து கொச்சைப் படுத்தி பண்பாட்டையும் சீர்குலைக்கிறார்கள், ஈஸியாக பெண்களை ஏமாற்றி கம்பி நீட்டும் ஆண்களுக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

ஏற்கனவே ஒரு சில அமைப்புகள் காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து வரும் நிலையில் காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை எல்லா நாளும் காதலர் தினமே என்றும் என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஹேஷ்டேக்கில் பல்வேறு இந்தியர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதால் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img