
ஒரு புலிக்குட்டியின் செயல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
வெள்ளை நிற புலிக்குட்டி ஒன்று தனது தாயிடம் பதுங்கி செல்லும் இந்த காட்சி ட்விட்டரில் Yoda4ever என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், வெள்ளைப் புலி குட்டி ஒன்று கதவிற்கு பின்புறம் மறைந்து இருந்து வெளியே படுத்திருக்கும் அதன் தாயை பயமுறுத்த எண்ணி, அதன் தாயை நோக்கி திருட்டுத்தனமாக நகர்ந்து அருகில் வந்து சத்தமாக உறுமுகிறது,
இந்த சத்தத்தை கேட்ட தாய் புலி அதிர்ச்சியடைந்து துள்ளி குதிக்கிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை ரசிக்க செய்துள்ளது.
அந்த வீடியோவுடன் “புலிக்குட்டி பதுங்கிச் சென்று அதன் தாயை பயமுறுத்துகிறது” என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தாய் புலி அதன் குட்டிக்கு வேட்டையாடும் திறனை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்றும், “இது ஒரு நல்ல தாய், தனது குட்டியின் வேட்டையாடும் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டே அந்த தாய் புலி பயந்தது போல் துள்ளுகிறது என்று கூறியுள்ளார்.
இதுவரையில் இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. சில மிருகக்காட்சி சாலைகளில் இந்த அரியவகை வெள்ளை நிற புலிகளை வளர்த்து வருகின்றனர்.
Tiger cub sneaks up on its mom.🐅😅 pic.twitter.com/kn7YsZsMpC
— 𝕐o̴g̴ (@Yoda4ever) February 16, 2022