திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளம் அருகே நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் மோசடி செய்ததாக நெல்லை பேராயர் உட்பட 5 பேர் மீது புகார்
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் பணம் மோசடி செய்யபட்டதாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 91 லட்சம் மோசடி செய்யபட்டதாக நெல்லை திருமண்டல பேராயர் உட்பட 5 பேர் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. நெல்லை திருமண்டலத்திற்கு சொந்தமான சி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி சுயநிதி கல்லூரியாக கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆலங்குளம்,சுரண்டை,பாவூர்சத்திரம் உட்பட சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் மானவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டல் வங்கியில் கணக்குகள் தொடங்கபட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர். 7-6-17 வரை கல்லூரி முதல்வராக ஜோயல் என்பவரும், 31-5-2017 வரை தாளாளர் மற்றும் செயலாளராக நெல்லை பேராயர் கிறிஸ்துதாஸும் இருந்துள்ளனர். நெல்லை திருமண்டல தேர்தல் நீதிமன்றம் மூலம் நடத்தபட்டு புதிய நிர்வாகிகள் பொருபேற்று நல்லூர் கல்லூரி புதிய தாளாளர் மற்றும் செயலராக வக்கீல் நெல்சன்,முதல்வராக பீட்டர் பேரின்பராஜா ஆகியோர் நியமிக்கபட்டனர். இந்நிலையில் கல்லூரி தாளாளர் நெல்சன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் நெல்லை பேராயர் கிறிஸ்துதாஸ் மற்றும் முதல்வர் ஜோயல் உட்பட 5 பேர் கல்லூரி பணம் 91,90,544 ரூபாயை மோசடி செய்துள்ளனர் எனவும் மேற்படி பணத்தை சட்டப்படி பெற்று தரவேண்டும் என புகார் அளித்தார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கல்லூரியின் முன்னாள் தாளாளர் பேராயர் கிறிஸ்துதாஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஜோயல் ஆகியோர் கல்லூரி மானவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்லூரிக்கு சொந்தமான பணம் 91,90,544 ரூபாய்யை அவர்களுக்கு வேண்டியவர்களான கல்லூரிக்கு சம்பந்தமிலாத குருவானவர் காந்தையா நல்லபாண்டி மற்றும் ஜெயக்குமார் ஜெயராஜ் ஆகியோர் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். தமிழ்நாடு மெர்கன்டல் வங்கியில் உள்ள சி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் 6 வகையான கணக்குகளை நூதன முறையில் இந்தியன் வங்கி ஆலங்குளம் கிளையில் சி எஸ் ஐ டி ஏ என்ற பெயரில் மாற்றியுள்ளனர். இது தற்போதைய நிர்வாக ஒப்புதலின்றி கணக்கு ஆரம்பிக்கபட்டு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். இதற்கு சென்னை சி எஸ் ஐ பிரதம பேராயர் தாமஸ் கே ஓமன் உடந்தையாக உள்ளார். தற்போது கல்லூரி பணத்தை அவர்கள் மோசடியாக எடுத்துள்ளதால் நிர்வாகம் செயல்படாத நிலை உள்ளது. எனவே பணத்தை மோசடி செய்த 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கூறபட்டுள்ளது.