Thirupathi - 2026

வாரத்தில் 3 நாட்கள் இலவச தரிசனம் அதிகரிப்பு..! திருப்பதி தேவஸ்தானம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Thirupathi - 2026

திருப்பதியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் இலவசமாக ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்காக ஒதுக்கப்படும் நேரத்தை அதிகரிக்க முடிவுசெய்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம், அந்த நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து முடிவு செய்துள்ளது.

இதனால் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் நேரம் மேலும் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை மேலும் சில ஆயிரங்கள் அதிகரிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.