சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் சென்னை: பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய போலீஸ் உதவி ஆணையர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ பதிவு நேற்று முழுவதும் பரவியது. அதில், சென்னையில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்டும் வசனங்களைப் பேசுகிறார். என்னை விட உன் கணவர் அழகா இருப்பாரா?, நீ சுடிதாரில் அழகாக இருக்கிறாய், தனியாக வெளியில் சந்திப்போம், என்று செல்போனில் அழைப்பு விடுக்கிறார். செல்போனில் ஒண்ணு (முத்தம்) தரவா என்றும் கேட்கிறார். நேற்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் இந்த செல்போன் பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. இந்த உரையாடலை நிகழ்த்தியவர், ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மகள் என்ஜினீயரிங் மாணவி. தொல்லைக்கு ஆளான பெண் போலீசும் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய். இருவருக்கும் 20 வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கும். இருப்பினும், அந்த பெண் போலீஸ் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வடசென்னை கூடுதல் ஆணையர் வி.ஏ.ரவிக்குமார், இந்த விசாரணையை நடத்துகிறார். தொடர்புடைய உதவி ஆணையர், பெண் போலீஸ், பெண் போலீசின் தோழிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் உதவி போலீஸ் ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ்-அப்பில் பரவிய அந்த ஒலிப்பதிவு: