பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ. 7.79 கோடி அபராதம் வசூல்: மதுரை கோட்டம்!

train service - 2026

ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.7.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.
7.79 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதில், “ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது, பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோர் பிடிபடுவது வழக்கம்.

மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனைகளை நடத்துவார்கள்.

அவ்வாறு கடந்த 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நடப்பாண்டின் பிப்ரவரி 27ஆம் தேதிவரை மதுரை கோட்டத்தில் 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.7.79 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் தெற்கு ரயில்வேயில் பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் அபராதமாக ரூ.83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 22.9 விழுக்காடு அதிகமாகும். சென்னை கோட்டத்தில் 6.33 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ.29.86 கோடி, திருவனந்தபுரம் கோட்டத்தில் 3.10 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.16.53 கோடி, பாலக்காடு கோட்டத்தில் 2.70 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.14.15 கோடி, சேலம் கோட்டத்தில் 1.69 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.9.61 கோடி, திருச்சி கோட்டத்தில் 1.12 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.6.02 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் தெற்கு ரயில்வே அளவில் அபராதமாக ரூ.9.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32.8 விழுக்காடு அதிகமாகும்.

மேலும் நடப்பாண்டின் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் அதிகப்படியாக பயணச்சீட்டு இல்லாத 8,425 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.43.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் ரயிலில் உரிய பயணச் சீட்டு, புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்வதோடு அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்லுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுக்கிறது” என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories