மண்டைக்காடு கோயியில் நாளை வலியபடுக்கை பூஜை…

Published:

பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் நாளை வெள்ளி க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முக்கியபூஜையாக வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது.
தென் மண்டல ஐ.ஜி.அன்பு மண்டைக்காட்டுக்கு நேரில் வந்து பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்தார்

images 40 - 2026

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உற்சவத்தில்
வியாழக்கிழமை காலை அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும் மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து யானை மீது சந்தனக்குட ஊர்வலம் புறப்பட்டது.பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசையும், 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், பகல் 12 மணிக்கு யானை மீது களப பவனியும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், நள்ளிரவு 12 மணிக்கு முக்கியபூஜையாக வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது.
நாள் முதல் வரும் செவ்வாய் கிழமை வரை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா வில் பக்தர்கள் மிக அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில்
கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த நிலையில் தென் மண்டல ஐ.ஜி.அன்பு மண்டைக்காட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அவர் கடற்கரை, கோவில் வளாக பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதன்பிறகு போலீசாருக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? எனவும் போலீஸ் மெஸ்சிற்கு சென்றும் ஆய்வு நடத்தினார்.

Related articles

Recent articles

spot_img