sbi - 2026

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த SBI!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா வணிகம்
sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது.

எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ஆதார் – பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டதாக எஸ்பிஐ அலர்ட் கொடுத்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், ஆதாருடன் பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம். அப்படி இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதன்பின் பான் கார்டை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது.

வாடிக்கையாளர்கள் அனைவரும் தடையில்லா வங்கி சேவைகளை அனுபவிக்கவும், அசவுகரியத்தை தவிர்க்கவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென அறிவுறுத்துகிறோம், என்று தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைனிலேயே ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துவிடலாம்.

ஆன்லைனில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆதாருடன் பான் எண்ணை எப்படி இணைப்பது என்ற விவரம்..

https://www.incometaxindiaefiling.gov.in/home என்கிற வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வஇணையதளத்திற்குள் செல்லவும்.

‘லிங்க் ஆதார்’ என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கத்திற்கு செல்வீர்கள்

ஆதார் கார்டில் உங்கள் பிறந்த தேதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால், ‘ஆதார் அட்டையில் நான் பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது’ (I have only year of birth in the Aadhaar card) என்ற செக்பாக்ஸை டிக் செய்யவும்.

இப்போது ஒடிபி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறகு லிங்க் ஆதார் என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

இந்த முறை இல்லாமல் எஸ் எம் எஸ் வழியாகவும் நீங்கள் ஆதார் பான் எண்ணை இணைக்கலாம்.

இதற்கு முன்பு ஆதார்- பான் கார்டுகளைஇணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 2021-வுடன் முடிவடைய இருந்த நிலையில், மார்ச் 31 2022 வரை நீட்டிக்கப்பட்டது.குறிப்பிட்ட தேதிக்கு பின்பும் பான் – ஆதார் இணைப்பை நிகழ்த்தவில்லை என்றால் அந்தந்த வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.