அ.தி.முக தினகரன் அணி சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த  பாவூர்சத்திரத்தில் கண்டன பொதுக்கூட்டம்   நடைபெற்றது ,பொதுக்கூட்டம் நடத்த திருநெல்வேலியில் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது,இதையடுத்து பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திடலில்  நடத்த போராடி அனுமதி வாங்கினர் தினகரன் அணியினர் மேடை அமைத்தனர் ,மேடை அமைத்து பொதுக்கூட்ட ஏற்ப்பாடு நடக்க  மறுபடியும் சார் பதிவாளரிடம் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நெடுஞ்சாலையின்  ஓரத்தில் நடத்த அனுமதி கொடுத்தனர் காவல் துறையினர் ,பொதுக்கூட்டம் நடத்தும் பொறுப்பு மாணவரணி மாவட்ட செயலாளர்  சரவணனுக்கு கொடுக்கபட்டது  இது அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் எப்படியும் கூட்டத்தை  வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார் ,முதன் முறையாக பாவூர்சத்திரம் வந்த மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையாவை அழைத்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க செய்தார்  இது கட்சியினர் மத்தியில் நல்ல வரவேப்பை தந்தது ,பொதுக்கூட்டதிற்கு  ஆள் வராது என எதிர்கட்சியினர் நினைக்க இது தானா சேர்ந்தக் கூட்டம் என நிருபித்தார் ,பொதுக்கூட்டத்திற்கு டி.டி.வி.அணியில் உள்ள முக்கிய தலைவர்களான,பாப்புலர் முத்தையா ,முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா  ,அமைப்பு செயலாளர் ஆதித்தன் என பெருந்தலைகள் வந்தது ,டி.டி.வி.அணி தொடர்களுக்கு பெரும் உற்சாகத்தை காண முடிந்தது
 
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending