202203061008292393 Tamil News Tamil News Northern robbers four arrested for gold robbery MEDVPF - 2026

திருப்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த‌ நால்வர் கைது..

சற்றுமுன்

திருப்பூரில் ஜெயக்குமார் என்பவரது நகை கடையில் கடந்த 3ம் தேதி 375 சவரன் நகைகள் 9கிலோ வெள்ளி ரூ25லட்சம் கொள்ளை போனது. கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்
போலீசார் 3தனிபடை அமைத்து விசாரணை நடத்தி வெப்கேமரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர்.இவர்கள் திருப்பூரில் இருந்து ரயில் மூலம் மஹாராஷ்டிரா சென்றபோது ரயில்வே போலிஸ் உதவியுடன் வடமாநிலத்தவர் 4 பேரை மராட்டிய மாநிலத்தில் இன்று கைது செய்தனர்.
மகாராஷ்டிரா ரெயில்வே போலீசாரின் உதவியை நாடிய தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரின் உருவப்படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

202203061008292393 Tamil News Tamil News Northern robbers four arrested for gold robbery MEDVPF - 2026

கொள்ளையர்கள் 4 பேரும் பயணித்த ரெயில் நாக்பூர் பலர்சா என்ற பகுதியில் செல்லும்போது ரெயில்வே போலீசார் ரெயிலில் ஏறி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் இருந்த 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து திருப்பூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் நாக்பூருக்கு விரைந்தனர். அவர்களிடம் 4 பேரையும் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் 4 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் ஆலம், பத்ருல் (27), திலாகாஸ்(20), முகமது சுப்ஹான் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தபோது 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி நகைகள், ரூ.14 லட்சம் பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சம் இருக்கும்.

பின்னர் 4 பேரையும் நாக்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய தனிப்படை போலீசார், அவர்களிடம் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவதற்காக திருப்பூருக்கு அழைத்து வருகின்றனர்.நகை கொள்ளை ச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதால் திருப்பூர் வியாபாரிகள் நிம்மதியடைந் துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.