மதுரையருகே சிறுமி பாலியல் கொலை…விஸ்வரூபமெடுக்கும் பிரச்சனை…

மதுரை அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பலியான விவகாரம், சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்த உண்மை தெரியாமலேயே புதைந்து போனது பலரையும் அதிருப்தி யடையச்செய்துள்ளது.இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு விட வேண்டுமென மதுரை மாவட்ட இந்துமக்கள்கட்சி கோரரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். மேலூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுல்தான் மகன் நாகூர்அனிபா என்ற வாலிபருக்கும் காதல் இருந்தது தெரியவந்தது.
எனவே அவர்தான் சிறுமியை அழைத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நாகூர்அனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ந்தேதி காணமல் தேடப்படும் சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டு சென்றாராம்.
வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வாக காணப்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சிறுமியை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை சீராகாததால் சிறுமி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற விவரம் தெரியாததால் சிகிச்சையில் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. எனவே நாகூர் அனிபாவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மதுரை, சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைத்து நாகூர் அனிபா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 14-ந்தேதி திருமண ஆசை காட்டி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு நாகூர் அனிபா அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராகிம் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையில் சிறுமி மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் நாகூர் அனிபா பயந்துபோனார். இதனால் வி‌ஷம் வாங்கிய நாகூர் அனிபா அதை சிறுமிக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் அதனை துப்பி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறாமல் சிறுமியை கொண்டு வந்து தனது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது வீட்டில் விட்டு விடுங்கள் என நாகூர் அனிபா கூறி சென்றுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி நாகூர் அனிபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை திருநகர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூர் சாகுல் அமீது, நாகூர் அனிபா தாயார் மதினா பேகம், உறவினர்கள் ரம்ஜான்பேகம் என்ற கண்ணம்மாள், ராஜா முகமது ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதில் நாகூர் அனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு எலி மருந்து கொடுக்கப்பட்ட விவரம் தெரியவந்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
என்றாலும் அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு மயக்கம் தெளிந்தால் தான் அவர் திருப்பூர் கடத்தி செல்லப்பட்டு எத்தகைய பாலியல் கொடூரத்துக்கு ஆளானார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கருதினார்கள்.
அந்த சிறுமி திருப்பூரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆனால் போலீஸ் தரப்பில் இந்த புகார் மறுக்கப்பட்டது. எனவே சிறுமி மயக்கம் தெளிந்தால் தான் உண்மை நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த சிறுமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதனால் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உண்மை தெரியாமலேயே புதைந்து போனது என்ற கவலையில் சிறுமி யின் பெற்றோர் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.

சிறுமி பாலியல் கொடுமை சம்பவம் குறித்து இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர் எம்.சோலைகண்ணன்
வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

கடந்த சுமார் 16 நாட்களாக இச்சிறுமியை கடத்தி வச்சு பாலியல் செயலில் ஈடுபட்டவர்கள் யார்?
இதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்?
இச்சிறுமியை காதல் என்ற போர்வையில் திட்டமிட்டு கடத்தப்பட்டாரா?
இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் ?
என்று இவ்வழக்கை விசாரிக்க தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை. ஏனென்றால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் மணிகண்டன் தற்கொலை வழக்கும், அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கும் என்ன நடந்ததோ என்பதை பற்றி நன்கு தெரிந்து கொண்டோம்.
ஆகவே போதை ஊசி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கோமா நிலைக்கு சென்ற அச்சிறுமிக்கு நீதி வேண்டியும்,பாலியல் செயலில் சம்பந்தட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு விட வேண்டுமென மதுரை மாவட்ட இந்துமக்கள்கட்சி கோரரிக்கை வைக்கிறது.
இல்லையேல் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக மிகப்பெரிய போராட்டம் விரைவில் தொடரும் என்பதை மத்திய மாநில அரசுக்கு இந்துமக்கள்கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.என தெரிவித்துள்ளார்.

images 42 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories