சீன ராக்கெட்டால் நிலவில் பள்ளம்: நாசா திடுக் தகவல்!

Published:

moon - 2026

சீனாவின் ராக்கெட் நிலவில் மோதியதில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக சீனா அனுப்பிய ராக்கெட்டுகள் விண்வெளியில் சுற்றி வந்த நிலையில், அந்த ராக்கெட்டின் 3 டன் எடையுள்ள உதிரிபாகங்கள் ஆயிரம் மைல் வேகத்தில் நிலவில் மோதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நிலவில் 65 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால் நாசாவின் இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா அனுப்பியுள்ள ராக்கெட்டுகளில் உதிரிபாகங்களால் நிலவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது விஞ்ஞானிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related articles

Recent articles

spot_img