சபரிமலையில் கொடிற்றம்.திருவிழா துவக்கம்..

சபரிமலை அயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றயதும் இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்திற்கு முன்னோடியான பிரகார சுத்திகிரியைகள் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றத்துக்காக கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை சாஸ்தா கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிப்பட்டம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது
இந்நிலையில் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தங்ககொடிமரத்தில் புதிய கொடி பட்டம் கொண்டு கொடி ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

வழக்கமான பூஜைகளுக்கு பின் மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதைத்தொடர்ந்து 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன் லைன் முன் பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவும் நடந்து வருகிறது.

ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், திருவிழாவையொட்டி சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. உடனடி தரிசன முன் பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல் கொண்டு வர வேண்டும். முன் பதிவு செய்த பக்தர்கள், தரிசனத்திற்கு 72 மணி நேரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, கேரள அரசின் சிறப்பு பஸ்கள் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம்திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும். .

Tamil News large 297868020220309061802 - 2026
FB IMG 1646809540271 - 2026
FB IMG 1646810596587 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories