பஞ்சாப், மணிப்பூர், கோவா
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 10ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது. நடந்தது. ஐந்து மாநிலங்களிலும் வெளியான ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்கும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சில கருத்துக் கணிப்புகள், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில் இழுபறி ஏற்படும் என தெரிவித்துள்ளன.
இந்த ஐந்து மாநில தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தல் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
மேலும் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிப்பதிலும் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கிய பங்காற்று உள்ளன.உ.பி., பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மார்ச் 10) காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடக்கிறது. உ.பி.,யில் பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
காலை 9மணி நிலவரப்படி
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 12, சமாஜ்வாடி 5 இடங்களில் முன்னிலை, பஞ்சாபில் காங்கிரஸ் 2, ஆம் ஆத்மி 3 தொகுதியிலும், உத்தரகாண்டில் பாஜக 7, காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முன்னிலைவகித்தன.




