2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டா!

google play store - 2026

டிக்டாக் போன்ற பிரபல ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்ம்களுக்கு போட்டியாக ரீல்ஸ் போன்ற முன்முயற்சிகளில் இன்ஸ்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதன் காரணமாக IGTV app-ஐ ஷட் டவுன் செய்யும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டா உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் ஆப் ஸ்டோர்களில் இருந்து மேலும் இரண்டு பழைய ஆப்ஸ்களை நீக்கி இருக்கிறது இன்ஸ்டா.

ஆம், கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse) மற்றும் பூமராங் (Boomerang) ஆகியவற்றுக்கான அதன் தனி ஆப்ஸ்-களை சத்தமின்றி நீக்கியுள்ளது இன்ஸ்டா.

நாம் மேலே குறிப்பிடப்படி மெட்டாவுக்கு சொந்தமான சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம், TikTok போன்ற ஷார்ட்-வீடியோ பிளாட்ஃபார்ம்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இப்போது Reels மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் ஹைப்பர்லேப்ஸ் யூஸர்கள் டைம்-லேப்ஸ் (time-lapse) வீடியோக்களை உருவாக்க உதவியது.

Instagram - 2026

அதனை தொடர்ந்து கடந்த 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட பூமராங், யூஸர்கள் முன்னும் பின்னும் சுழலும் ஷார்ட் வீடியோக்களை கிரியேட் செய்ய உதவியது.

இந்த இரண்டில் பூமராங்கானது மெயின் இன்ஸ்டாகிராம் ஆப்ஸில் யூஸர்கள் பயன்படுத்த தற்போதும் கிடைக்கிறது.

TechCrunch வழங்கி உள்ள தரவுகளின் படி ஹைப்பர்லேப்ஸ் மற்றும் பூமராங் ஆகியவை ஆப் ஸ்டோர்களில் மார்ச் 1, 2022 வரை இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.

ஆப் ஸ்டோர்களில் இந்த இரண்டில் உலகளவில் பூமராங் 301 மில்லியன் லைஃப்டைம் டவுன்லோட்ஸ்களையும், ஹைப்பர்லேப்ஸ் வெறும் 23 மில்லியன் லைஃப்டைம் டவுன்லோட்ஸ்களையும் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதலாக பூமராங் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்ட போது ஒரு நாளைக்கு சராசரியாக 26,000 டவுன்லோட்ஸ்கள் இருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பூமராங் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஆகிய இரண்டிலும் கிடைத்த, அதே நேரத்தில் ஹைப்பர்லேப்ஸ் iOS யூஸர்களுக்கு மட்டுமே கிடைத்தது இங்கே கவனிக்கத்தக்கது.

IGTV மற்றும் முக்கிய இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் தவிர இன்ஸ்டாகிராம் லேஅவுட் ஆப்-ஆனது இரண்டு ஆப் ஸ்டோர்களிலும் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

மேலும் மிதமான ஹார்டுவேர் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்காக கூகுள் ப்ளேயில் இன்ஸ்டாகிராம் லைட் வெர்ஷன் ஆப் கிடைக்கிறது. மார்ச் 8-ஆம் தேதி வரை, Instagram Lite ஆப்ஸ் சுமார் பத்து கோடிக்கு மேல் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாவின் செய்து தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முக்கிய Instagram ஆப்ஸை மேலும் சிறப்பாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் பூமராங் மற்றும் ஹைப்பர்லேப்ஸ் ஆகியவற்றுக்கான தனி சப்போர்ட்டை அகற்றியுள்ளோம்.

இன்ஸ்டாகிராமில் மக்கள் ஆக்கப்பூர்வமாகவும் வேடிக்கையாகவும் இருக்க தேவைப்படும் புதிய வழிகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories