Shoba Karantlaje1 - 2026

உபியில் பாஜக ஆட்சி.. மத்திய அமைச்சர் திருப்பதியில் பிரார்த்தனை!

சற்றுமுன் அரசியல் இந்தியா
Shoba Karantlaje1 - 2026

திருப்பதி மலைக்கு வந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே ஏமலையானை வழிபட்டார்.

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசிர்வாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

Shoba Karantlaje - 2026

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், உத்தரபிரதேச மாநிலத்துடன் எனக்கு நான்கு ஆண்டுகால நெருங்கிய தொடர்பு உள்ளது.

அங்கு பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.