தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தமிழக தலைவர் பேட்டி..

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரித்துள்ள நிலை விரைவில் தமிழகத்திலும் நிகழும்என கூறியுள்ளார்.

images 36 2 - 2026

அவர் மேலும் கூறியதாவது,

மறுபடியும் ஒருமுறை நமது நாட்டு மக்கள் ஒரு மித்த குரலில் நாங்கள் பாரத பிரதமருடன் பயணிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 
உத்தர பிரதேசத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது சாதனை. அந்த மாநிலத்தில் சாதி அடிப்படையில், மத அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வந்தது. அதை முதன் முறையாக பாஜக உடைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கையாண்ட வித்திற்கு கிடைத்த வெறறியாக இது கருதப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்றே வெற்றிக் கொண்டாட்டததை காங்கிரஸ் கட்சியினர் ஆரம்பித்தனர். ஆனால் இன்று மக்கள் தீரப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. 
மணிப்பூரில் 2012 ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. 2017 ல் 21 இடங்களை பாஜக பிடித்தது. இன்று தனிப் பெரும்பான்மையுடன் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
மணிப்பூரில் 52 சதவீதம் சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர். அங்கு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது சரித்திர சாதனையாகும்.
கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தமிழகத்திலும் நிகழும் என்பதில் எந்த வொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. 
அது 2024 ஆண்டா அல்லது 2026 ஆண்டா என்பது தெரியாது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகி விட்டதாக தேர்தல் ஆணைம் கூறியுள்ளது. தமிழக பாஜக கட்சியும் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories