images 62 - 2026

ஏப்ரலில் அமர்நாத் யாத்திரை முன்பதிவு துவக்கம்..

சற்றுமுன்

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கும். தினமும் 20 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடம் 51 சக்தி பீடங்களை கொண்டுள்ளது.

இக் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

images 62 - 2026
Amarnath temple 2 - 2026
images 63 - 2026

இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு நேற்று விவாதித்தது.

இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கும். தினமும் 20 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த அமர்நாத் யாத்திரையில், இந்த ஆண்டு அதிகமானோர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.