ஃபாஸ்ட் டேக் சேவை: ஐசிஐசிஐ வங்கி!

ICICI Bank - 2026

அமேசான் பே உடன் இணைந்து ஃபாஸ்ட் டேக் சேவையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. அமேசான் பே ஆப் பயன்படுத்தி இந்த சேவைக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

உங்கள் வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் சேவையை ஏற்படுத்துவதன் மூலமாக, சுங்கச்சாவடிகளில் நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி துரிதமாக பயணங்களை மேற்கொள்ளலாம்.

அனைத்து வாகனங்களுக்கும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் அவசியம் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தியது.

fastag - 2026

இதைச் செய்யத் தவறுபவர்கள், சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும்போது இருமடங்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஃபாஸ்ட் டேக் சேவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும்.

இதனால், தேவையற்ற கால விரயம் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, அவசரமாக பயணங்களை மேற்கொள்பவர்கள் சுங்கச்சாவடியில் நிலவும் தாமதம் காரணமாக அவதியடைந்து வந்தனர்.

பண்டிகை நாட்களில் சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும்போது, பெருமளவுக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

இத்தகைய சூழலில் ஃபாஸ்ட் டேக் சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வாகனங்கள் தடையின்றி பயணித்து வருகின்றன.

வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை, சுங்கச்சாவடியில் உள்ள ஸ்கேனர் கேமரா, ஆடோமேடிக்காக ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்வதால், உடனடியாக பயணத்தை தொடர முடிகிறது. இதனால், வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் சூழல் தவிர்க்கப்படுகிறது.

எண்ணற்ற டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்கள் சார்பில் ஃபாஸ்டேக் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தங்களுடைய வாடிக்கையாளர்கள் பலன் அடையும் வகையில், அமேசான் பே உடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கியும் அந்தச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

முதலில் நீங்கள் அமேசான் ஆப் திறந்து, அமேசான் பே ஸ்கீரினுக்கு செல்ல வேண்டும். அங்கு ரீசார்ஜ் செக்‌ஷன் கீழ் உள்ள “ரீசார்ஜ் & பை ஃபாஸ்ட் டேக்” என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது அடுத்த ஸ்கிரீன் தோன்றும். அங்கு மஞ்சள் நிறத்தில் காட்டப்படும் “பை அமேசான் ஐசிஐசிஐ ஃபாஸ்ட் டேக்” என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ஃபோன் பிரவுசரில் ஐசிஐசிஐ வங்கியின் இணைதள பக்கம் திறக்கப்படும்.

இந்தப் பக்கத்தில் உங்கள் சுய விவரங்கள் மற்றும் வாகனத்தின் விவரங்களை கொடுக்கவும். இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் நம்பரை வெரிஃபை செய்து, ஓடிபி பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தி முடிக்கவும். உங்கள் ஃபாஸ்ட் டேக் வசதி இப்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கும்.

மார்ச் 31ஆம் தேதி வரையில் அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories