images 51 - 2026

மார்ச் 16முதல் இந்தியாவில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்..

சற்றுமுன்

இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் 16 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

images 51 - 2026
ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.