images 33 - 2026

கொரோனாவுக்கு குட்பை..இனி மதுரை கோட்ட விரைவு ரயில்களில் முன்பதிவில் லா பெட்டிகள்…

சற்றுமுன்

மதுரை கோட்டத்தில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனி மதுரை கோட்டத்தில் கீழ் கண்ட 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் சாதாரண இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து பயணிக்க முடியும். ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் (16617), மதுரை – புனலூர் (16729), புனலூர் – மதுரை (16730), நெல்லை – பாலக்காடு பாலருவி ரயில் (16791), மதுரை – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் (20602), தஞ்சாவூர் மெயின் லைன் வழி மதுரை – சென்னை எழும்பூர் (22624) உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் 16 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

images 33 - 2026

அதேபோல தூத்துக்குடி – மைசூர் (16235), ராமேஸ்வரம் – செகந்திராபாத் (07686), மதுரை – கசக்குடா (17616) ஆகிய விரைவு ரயில்களில் மார்ச் 20 முதலும், தூத்துக்குடி – சென்னை முத்துநகர் (12694) ரயிலில் ஏப்ரல் 1 முதலும், நெல்லை – சென்னை- நெல்லை ரயில் (12632), மதுரை – சென்னை பாண்டியன் ரயில் (12638), செங்கோட்டை – சென்னை பொதிகை ரயில் (12662), ராமேஸ்வரம் – சென்னை போட் மெயில் (16852), ராமேஸ்வரம் – சென்னை சேது ரயில் (22662) ஆகியவற்றில் ஏப்ரல் 16 முதலும், ராமேஸ்வரம் – திருப்பதி ரயிலில் (16780) ஏப்ரல் 20 முதலும், திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16106),

செங்கோட்டை – சென்னை சிலம்பு ரயில் (16182), மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா ரயில் (16344), காரைக்குடி – சென்னை பல்லவன் ரயில் (12606), மதுரை – சென்னை வைகை ரயில் (12636), புனலூர் – குருவாயூர் ரயில் (16327), ராமேஸ்வரம் – திருச்சி ரயில் (16850) ஆகிய விரைவு ரயில்களில் மே 1 முதலும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகிறது. குறிப்பிட்ட தேதிகளுக்கு பிறகு இருக்கை வசதி முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் கட்டண தொகை முழுமையாக திருப்பி தரப்படும். இது சம்பந்தமாக அவர்களது அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுவருவதாக ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.