மருதமலை முருகனுக்கு அரோஹரா… உலக அளவில் தமிழர் பண்பாடு புகழ் பெற்றது!: மோடி

இந்தியா உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்

modi coim batore - 2026

மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கோவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

இன்று மாலை 6.30க்கு மேல் கோவை கொடீசியாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார் பிரதமர் மோடி. அவருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 40 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்; நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று பேசினார்.

பின்னர், கோவை கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி பேசியபோது…

மருதமலை முருகனுக்கு அரோகரா… வணக்கம் சகோதர, சகோதரிகளே என உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. எம்ஜிஆர், ஜெ.வின் எண்ணஙகள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன்.. என்றார்.

பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது; உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது.

21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை

நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம் –

பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது !

நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும். துல்லிய தாக்குதல் நடந்ததா?விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது-.

ராணுவம், விமானப்படை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சந்தேகித்து வருகின்றன – பிரதமர் மோடி. தேசியவாதியாக இருப்பது குற்றமா? இந்த தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது என்று பேசினார் பிரதமர் மோடி.

1 thought on “மருதமலை முருகனுக்கு அரோஹரா… உலக அளவில் தமிழர் பண்பாடு புகழ் பெற்றது!: மோடி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.