ladha mankeshkar - 2026

லதாமங்கேஸ்கர் வடிவில் கேக் சிலை! புதிய கடைத் திறப்பு விழா சிறப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் திருச்சி
ladha mankeshkar - 2026

திருச்சி வயலூர் சாலையில் மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் இன் பேக்ஸ் புதிய கடைத் திறப்பு விழாவையொட்டி, மறைந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 80 கிலோ எடையில் கேக்கை சிலையாக அந்த நிறுவனத்தினர் வடிவமைத்து, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் இன் பேக்ஸ் என்ற பெயரில் புதிய இனிப்பகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, 50 கிலோ சர்க்கரை கொண்டு, 6 அடி உயரத்தில் 80 கிலோ எடையில் லதா மங்கேஷ்கரின்
உருவச்சிலை கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை கடந்த 3 நாள்களாக இரவு, பகலாக சிரமம் மேற்கொண்டு 6 பேர் வடிவமைத்தனர்.

இனிய குரலால் இந்தியர்களின் செவிகளை இனிக்கச் செய்த இசை அரசிக்கு பெருமை சேக்கும் விதமாக, இந்த கேக் சிலையை வடிவமைத்திருப்பதாக மஹாராம்ஸ் இனிப்பக நிா்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த சிலையை திறப்புவிழாவுக்கு வந்திருந்த பொதுமக்களும், அப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். பலரும், சிலைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை நிறுவனத்தின் நிர்வாகிகள் ராமசுப்பு, ஆதா்ஷ் ராமசுப்பு ஆகியோா் வழங்கினர்.

இதுதொடா்பாக, அவா்கள் கூறுகையில், காவிரி மாநகருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அதிரசம், கருப்பட்டி அல்வா, கை முறுக்கு, தேன்குழல், தட்டுவடை என பழைமையான பலகார வகைகளையும் அறிமுகம் செய்துள்ளோம்.

நவீன நளபாகத்தை அடிப்படையாகக் கொண்ட பீட்சா, பா்கா், மஜிட்டோஸ், சைனீஸ் உள்ளிட்ட மாா்டன் மெனுக்களையும் இணைத்து சுவைகளின் அணிவகுப்பாய் மஹாராம்ஸ் உணவுப் பொருள்களை வழங்குகிறோம். திருச்சி மாநகர மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.