dindukal - 2026

விநாயகர் சிலை தலையை உடைத்து குளத்தில் வீசிய மர்மநபர்கள்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

சற்றுமுன் கிரைம் நியூஸ் தமிழகம்
dindukal - 2026

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழிவிடு விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் விநாயகர் சிலையின் தலை பகுதி மட்டும் உடைக்கப்பட்டு மாயமானதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் விநாயகர் சிலையின் தலைப் பகுதியை உடைத்து அதனை அங்கிருந்த தாமரை குளத்தில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் மர்ம நபர் ஒருவர் விநாயகர் சிலையை கடப்பாரையால் உடைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டி சார்பில் இரண்டரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை வாங்கப்பட்டுள்ளது.

வழக்கமான பூஜைகள் நடத்திய பிறகு சிலை நிறுவப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.