ஜெ.தீபா பேரவை நிர்வாகி ராமசந்திரன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ராமசந்திரன் என்பவர் அளித்துள்ள புகாரில், ' தீபாவும், அவரது டிரைவர் ராஜாவும் தாங்கள் வறுமையில் இருப்பதாக கூறி என்னிடம் பணம் வாங்கினர். முதலில் கொடுத்த ரூ.50 லட்சத்தை தனது கணவர் மாதவன் பேட்ரிக் எடுத்து கொண்டு விட்டார் என்று கூறி தீபா பணம் வாங்கினர். அந்த வகையில் ரூ.1.12 கோடி வாங்கி ஏமாற்றி விட்டனர்' என, கூறியுள்ளார்.



