திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை நகரின் மையத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.
12-ம் நூற்றாண்டில்
தென்பாண்டிய அரசர்களில் ஏராளமான கோயில்களுக்கு திருப்பணிகள் செய்தவர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் மன்னர் ஸ்ரீவல்லப மாற பாண்டியன் ஆவார்.
நெல்லை மாவட்டத்தில் இவரால் புதுப்பிக்கப்பட்ட கோயில்களில் மன்னார்கோவில், பாளையங்கோட்டை, விஜயநாராயணம் ஆகிய மூன்று கோயில்களில் சுவாமி ராஜகோபாலன் எழுந்தருளி இருக்கிறார். மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் போலவே, பாளையங்கோட்டை நகரின் மையத்தில் ராஜகோபால சுவாமி கோயில் அமைந்திருக்கிறது.
இங்கு, விமான மேல்தளத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் எழுந்தருளி உள்ளார்.
இக்கோயில் பிரசித்தி பெற்ற
பங்குனி பிரம்மோற்சவம் தற்போது நடக்கிறது. நேற்று இரவு 6-ம் திருநாளில் யானை வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
புதிதாக தயாராகி வெள்ளோட்டம் நடந்த தேரில் வரும் 19-ம் தேதி தேர்த்திருவிழா. 20-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி ராஜகோபாலசுவாமிக்கு நடக்கிறது.





