சென்னையில் பாஜக., தலைவர் அண்ணாமலை பேட்டி..

Published:

தமிழக முதல்வர் கூறியுள்ளது போல் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன். என பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

images 34 1 - 2026

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்புவதாக கவர்னர் தெரிவித்துள்ளார். இது திமுக.,விற்கோ, அவர்களின் பணிக்காகவோ அனுப்பி வைப்பதாக கவர்னர் சொல்லவில்லை.

பி.ஜிஆர் எனர்ஜி என்ற பெயரில் பேப்பரிலேயே இயங்கக்கூடிய நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்துள்ளது. தகுதியே இல்லாத இந்த நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி ஒப்பந்தத்தை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது. கோபாலபுரத்தில் தொடர்பு இருப்பதாலேயே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி அடிக்கடி தமிழகத்தில் மின்வெட்டு வரலாம். மக்கள் தங்கள் வீடுகளில் யுபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img