இன்று மார்ச் 20உலக சிட்டுக்குருவிகள் தினம்…

முன்பெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனிதர்கள் நகரம்,கிராமம் எதுவானாலும் சரி அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுவது சிட்டுக் குருவி கூவும் இனிய குரல்களில்தான் இப்போதெல்லாம் செல்போன் அலாரம்களில்தான் சிட்டுக் குருவின் ஓசையை கேட்க முடிகிறது.அந்த அளவுக்கு பெருகிவரும் செல்போன் டவர்கள்,மனிதர்களின் நாகரீக கலாச்சாரங்களினால் சிட்டுக்குருவி இனம் சிறுத்துக்கொண்டே போகிறது. காலப்போக்கில் சிட்டுக்குருவிகளை சரணாலயங்களில்தான் பார்க்கும் நிலமை ஏற்படாமல் இருக்க சீரான மழை பொழிய சிட்டுக்குருவி இனங்கள் வளர மனிதர்கள் செயல்படவேண்டும்.

மனிதர்களுக்கு நன்கு அறிமுகமான பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் ஒன்றாகும்.இந்த சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 13 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளை பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது.

சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 31 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்ல பறவைகளாக கிளி, மைனா போல வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி வீடு முழுவதும் குளீருட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப்புகையால் காற்று மாசடைந்து குருவிகளை வாழவைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏர்படும் உணவுப் பற்றாக்குறையால் நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினியால் அழிந்து வருகிறது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் உணவு தானியங்கள் கோணிப்பைகளில் இருந்து வீதிகளில் சிறிதளவாவது சிதறும். அவை சிட்டுக்குருவிகளுக்கு உணவாக மாறும்.ஆனால் இப்போது பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பதிலாக பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இப்போது தானியங்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுவதால் வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லாமல்போனது.

வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவும் உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன. அலைபேசிகளின் வருகைக்கு பின்னர் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டன. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கருவளர்ச்சி அடையாமல் வீணாகிறது என்கிறார்கள்.

நாம் பார்த்தும், ரசித்தும் மகிழ்ந்த ஒரு சிறு பறவையினம் நம்மிடம் இருந்து விடைபெற்று விடக்கூடாது. முட்டையிட்டு அடைகாத்து தன் இனத்தை பெருக்கி மனித இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதும், பாதுகாப்பதும் நமது பொறுப்பு.

இன்று மார்ச் 20-ந்தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம். இயற்கை ஆர்வலர்களின் இதயம் கவர்ந்த இந்த சின்னஞ்சிறு பறவை இனம் எங்கு எந்த பக்கம் திரும்பினாலும் காண கிடைக்கும் பறவையாகத்தான் நம் கண்முன்னால் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.ஆனால் 1990 களிலேயே சிட்டுக்குருவிகள் நம்மை விட்டுபோய்விடும் வகையில் அழிவு பாதையில் அவைகளை பயணிக்க வைத்துள்ளோம் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை மணியை ஒலித்தனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள் நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறான சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற சில காரணங்கள் தான் சிட்டுக் குருவி என்ற இந்த சிற்றினத்தை அழிவுப் பாதையில் தள்ளி இருக்கின்றன.

இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் குருவி என்றொரு பறவை இருக்கிறது என்றால் தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக சென்னை போன்ற பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்க முடியும். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் கிராமங்களில் சிட்டுக் குருவிகள் இன்னமும் இருப்பதே ஆகும். ஆனால் சென்னையில் கூட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டுக் குருவிகளின் கோட்டையாகவே இருந்தது என்பது இப்போது வெறும் வரலாற்று பதிவாகிவிட்டது.

இந்தியாவிலுள்ள 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கூட கடைபிடிக்கப்படுகிறது. பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில், இடுக்குகளில் சருகுகளைக் கொண்டு தனக்கென ஓர் இடம் அமைத்துக்கொள்ளும். அப்போதிருந்த வீடுகளில் மாநகரில் கூட சிட்டுக் குருவிகளுக்கான இடம் இருந்தது இந்த நிலமை மீண்டும் ஏற்படவேண்டும்.மீண்டும் மனித இனம் அதிகாலை சிட்டுக்குருவிகள் எழுப்பும் கீச்..கீச்.. ரிங்கார கீதத்தில் துயில் களைந்திட வேண்டும்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
images 5 2 - 2026
images 4 - 2026
images 2 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories