யூடியூப் செயலியில் புதிதாக அசத்தல் அம்சம்!

Published:

YouTube - 2026

யூடியூப் செயலியில் புதிதாக ஒரு அசத்தல் அம்சம் சேர்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஓடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும்.

ஏற்கனவே யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடத்தேவையில்லை.

வீடியோக்கள் பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அதில் நாம் தேவையான வார்த்தைகளை தேடி படிக்கலாம்.

தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பை அதிகம் பயன்படுத்தும் இணையபயன்பாட்டாளர்கள் இந்த புதிய அம்சத்தை அதிகளவில் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img