நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவிட #இரயில்மித்ரா தன்னார்வ சேவை அமைப்பு துவக்கப் பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை நிலைய அதிகாரி ஞானஆனந்த் தலைமையில் இந்தத் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுவர்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரயில்வே மித்ரா எனும் தன்னார்வ தொண்டர்கள் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் ரயில்வே பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, நிலையத்தை சுத்தமாக வைப்பது, ரோந்து பணியில் ஈடுபட்டு பயணிகளுக்கு உதவுவது, மாற்று திறனாளி பயணிகளுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு பயணிகளிடம் வரவேற்பை பெற்று வருகின்றனர்.
இந்தத் தன்னார்வ தொண்டர்கள் 10 பேர் அடங்கிய குழுவாக பயணிகளுக்கு சேவையற்றி வருகின்றனர். இந்த அமைப்பு மாவட்டத்திலே இங்குதான் முதலாவதாகத் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.





