
சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும் 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும். அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு இந்த ஆண்டு மண்டல பூஜையின் முகூர்த்தம் 27 ஆம் தேதி காலை 10.10 முதல் 11.30 மணிக்குள் இருக்கும் என்று கூறினார்.
பூஜையுடன் தொடர்புடைய தீபாராதனை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்ப சுவாமி மீது வைக்கப்படும் தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும்.
தீபாராதனைக்கு முன்னதாக மாலையில் சபரிமலை சன்னிதானத்தை அடையும். ஐயப்பன் சிலை மீது தங்க அங்கி வைக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 27 ஆம் தேதி மதியம் தங்க அங்கி வைக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். பின்னர், 27 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் மூடப்படும். மகரவிளக்கு விழாவிற்காக 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று தந்திரி தெரிவித்தார்.
மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அர்ப்பணிக்கப்பட்டது. டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முளா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாசம் ஏதும் வழங்கப்படவில்லை தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் இந்த வழி பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் சொல்ல முடியும்.
அதற்குப் பிறகு பெருவழி பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை இது போல் சத்தரம் பாதை வழியாக தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது வழக்கம் போல் செயல்படுகிறது என தெரிவித்தார்
சபரிமலையில் தற்போது பெரும் கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் திருவாங்கூர் தேவசம்போர்டு செய்து கொடுத்துள்ளது




