விரைவில் புதிய செயலி ரோஸ்கிராம்.. ரஷ்யா!

social media - 2026

உக்ரைன் நாட்டில் சேவை அளித்து வரும் சமூக வலைத்தளங்கள், ரஷ்யாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கு அனுமதிப்பதாகக் கூறி, அவற்றை ரஷ்ய அரசு தடை செய்து வருகிறது.

முன்னதாக, இதற்குரிய ‘Fake News Law’ எனும் சட்டத்தையும் ரஷ்ய அரசு அமல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக் ஆகிய மிகபெரும் சமூக வலைத்தளங்கள் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்டன. மேலும், இன்ஸ்டாகிராம் விரைவில் தடை செய்யப்படும் என ரஷ்ய மாநில தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் Roskomnadzor அறிவித்திருந்தது.

செய்வதறியாமல் திகைத்து நின்ற ரஷ்ய இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு ஆறுதல் தரும் விதமாக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், இன்ஸ்டாகிராம் தளத்திற்கு மாற்றாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை பகிரும் தளம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்த அறிவிப்பில், “ரோஸ்கிராம் எனும் புதிய செயலியை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் 28 ஆம் தேதி இந்த செயலி பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்படும்.

ரஷ்ய பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் ரோஸ்கிராமில் தொடலாம். படைப்பாளர்களுக்கு வருவாய் ஈட்டும் அம்சமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோஸ்கிராமில் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமை ரஷ்யா முடக்கியது. இதனால், 8 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இது பயனர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்ஸ்டாகிராம் தடை குறித்த தகவல்கள் ரஷ்யாவில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் பிற சமூக ஊடகங்களின் இணைப்புகளை பதிவிட்டு, இனி எங்களுடன் இதில் இணைந்திருங்கள் என்று தெரிவித்திருந்தனர்.

சிலரோ இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சிறந்த VPN-கள் குறித்த பதிவுகளை இணையத்தில் பரவவிட்டு வந்தனர்.

மேலும், இந்த செயலியில் புதிதாக சில அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக Rossgram இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, Crowdfunding மற்றும் பணம் செலுத்தி கணக்குகளை அணுகும் அம்சங்கள் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசு தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவெடுத்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ரஷ்யா தனது ஆதிக்கத்தை செலுத்த தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே, உள்நாட்டில் உள்ள Rostec நிறுவனத்தால், AYYA T1 ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories