ஆந்திர யாத்திரையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்…

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனந்தபூர் சென்றடைந்தார்.அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு வார பயணமாக ஆந்திரா சென்றுள்ளார்.காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 16ம் தேதி இரவு காஞ்சிபுரம் மடத்தில் இருந்து பொன்பாடி ஊருக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு, அங்கு தங்கி பூஜை செய்தார். 17ம் தேதி அங்கு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.மாலையில் பவுர்ணமி பூஜை நடந்தது. 18ம் தேதி பவுர்ணமி ஸ்நானம் செய்யப்பட்டது. 19ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த காமாட்சி ஸ்ரீவித்யா சமிதி நடத்திய, மூக பஞ்சஷதி ஸ்லோகம் நிகழ்ச்சி தொடக்கத்தில், காணொலி காட்சியில் உரையாற்றினார்.

பின், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திருமகள் திரிகால பூஜை செய்தார். அன்று மாலை பொன்பாடியில் இருந்து, ஆந்திர மாநிலம், கடப்பாவிற்கு புறப்பட்டு சென்றார்.இரவு 11:00 மணிக்கு கடப்பாவில் உள்ள அஹோபிலம் மடத்தை சென்றடைந்தார். 20ம் தேதி காலை, பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திரிகால பூஜை செய்தார். மாலையில் கடப்பாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றார்.

மடத்தில் 21ம் தேதி காலை, திரி கால பூஜை செய்தார். பின் அஹோபிலம் மடத்தில் உள்ள நரசிம்மர் சன்னிதியில், சுவாதி நட்சத்திர சிறப்பு தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார். கடப்பா மாவட்ட அர்ச்சக சமிதியில் உரையாற்றிய சுவாமிகள், அங்கிருந்து தாடிபத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம், பிராமண சமிதி பவன் மற்றும் தாடிபத்திரியில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்று, இரவு 11:45 மணிக்கு அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீமடம் முகாமிற்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார்.
பின்னர் அனந்தபூர் சென்றடைந்தார்.

அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு பக்தர்கள் சார்பில், ஸ்வகதா பத்திரிகை வழங்கப்பட்டது. அங்கு, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து சமாஜம் எதிர்கொள்ளும் சமூக விஷயங்களைப் பற்றி, பல்வேறு தலைப்புகளில் சுவாமிகள் பேசினார்.

அங்கு கூடியிருந்த மக்களை தர்ம காரியங்கள் செய்ய ஆசிர்வதித்து, தன் உரையை நிறைவு செய்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று பல்வேறு பூஜைகளை மேற்கொண்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Tamil News large 2990492 - 2026
Tamil News large 2989030 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories