தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை..

Published:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 26, 27 ல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 28 ல், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

120797959 80b4bee0 b78c 4247 9e0c 2bd84a6b6f9e 1 - 2026

Related articles

Recent articles

spot_img