தமிழகத்தில் ஆறுபடை முருகன் கோயிலில் ஒன்றான பழநி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.56 கோடி கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மலைக்கோவிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. காணிக்கையாக தங்கம் 808 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 23 கிராம் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 910 ரொக்கம் மற்றும் 128 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இணைஆணையர் நடராஜன் தெரிவித்தார்.






