ரேஷன்+ஆதார் கார்டு.. கடைசி தேதி நீட்டிப்பு!

ration card - 2026

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.

முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க மார்ச் 31 கடைசி தேதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வழங்கி உள்ள ரேஷன் அட்டை மூலம் சாமானிய மக்கள் குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அரசு அளிக்கும் பல சலுகைகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு சென்றடைகிறது. மேலும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டை காட்டி ரேஷன் எடுக்கலாம்.

அதனால் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது மிகவும் அவசியம் ஆகும். இந்நிலையில் ரேஷன் கார்டு, ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் ஜூன் 30, 2022 வரை நீட்டித்துள்ளது.

ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால், அரசு வழங்கும் பல வசதிகளை ரேஷன் அட்டைதாரர்கள் இழப்பார்கள் என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆதார் இணைப்பை ஆன்லைனில் எளிமையான முறையில் பண்ணலாம்.

இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் ‘ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

இதற்குப் பிறகு ‘ரேஷன் கார்டு பெனிபிட்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.

இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை(OFFLINE)இணைக்க ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories