train 3 - 2026

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி.. விரைந்து காப்பாற்றிய காவலர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
train 3 - 2026

பாட்டியாலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த பயணி ஒருவர் திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார்.

ரயில் கதவுக்கருகே உள்ள கம்பியை பிடித்து தொங்கியபடி அவர் போராடிய நிலையில் அங்கு பணியில் இருந்த ரகுபீர் சிங் என்ற ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் ஓடிச்சென்று ரயில் சக்கரங்களுக்குள் சிக்காமல் காப்பாற்றினார்.

அவர் காப்பாற்றப்பட்ட சில நிமிடங்களில் ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்த காட்சிகளின் சிசிடிவி பதிவை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சில சமயங்களில் நமது உயிரைக் காப்பாற்ற துணிச்சல் மிகுந்தவர்கள் வருவார்கள் என ரயில்வே பாதுகாப்புப் படை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பதிவில் மத்திய ரயில்வே அமைச்சகத்தையும், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவையும் ரயில்வே பாதுகாப்புப்படை டேக் செய்துள்ளது.

31 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் ரகுபீர் சிங்கிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.