கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டாட்டம்!

Published:

kumbakarai - 2026

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை நீராதாரமாக கொண்ட இந்த அருவியில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாத நிலையில் அருவியில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடந்த 3 தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கோடை வெப்பத்தை தணிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img