தமிழக சட்டசபை ஏப் 6முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம்…

Published:

மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக
சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி துறை ரீதியான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறினார்.

அவர் கூறியதாவது,

தமிழக சட்டப்பேரவை யில் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம்பெறும்.

கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து,தமிழ்நாடு சட்டப்பேரவையை நேற்று மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

images 2022 03 25T140508.169 - 2026

Related articles

Recent articles

spot_img