திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம்:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் 25ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகம் தரிசனம் செய்தனர்.

kumbapisakam - 2026
gallerye 121155675 2993127 - 2026

தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோவில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 60, 70, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

கடந்த 23-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8-வது யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 8-வது கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.பின்னர் சிவ ஆகமங்கள் முறைப்படி சிவஸ்ரீ எம்.கே.கணேசகுருக்கள் தலைமையில் 120 வேத விற்பன்னர்கள், 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றது. பூர்ணாஹீதியுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் வாணவேடிக்கையுடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்தில் வந்தடைந்தது.

இதையடுத்து காலை 10.45 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கும், அம்பாளுக்கும் கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வட்டமிட புனித நீரால் கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories