images 2022 03 27T170707.420 - 2026

கள்ளநோட்டு..நால்வர் கைது..

சற்றுமுன்

2.36 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு ஆட்டோ மற்றும் நால்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க வந்த அஜாஸ்கான் என்பவர் 200 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்தார். விற்பனையாளருக்கு இது தெரிந்தது. போலீசிடம் புகார் அளித்தார். அஜாஸ்கானை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அண்ணா சாலையில் வசிக்கும் அம்ருதினிடம் இருந்து கள்ள நோட்டுகள் வாங்குவது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தினர். ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளில் அச்சடித்த 2.36 லட்சம் ரூபாய் சிக்கின. ஆட்டோவோடு கள்ள நோட்டையும் பறிமுதல் செய்தனர்.

இதில் தொடர்புடைய சிட்லபாக்கத்தை சேர்ந்த ஷஹின்ஷா , காஞ்சிபுரத்தை சேர்ந்த சையது , ராஜி ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ரகுபதி என்பவரை புதுச்சேரியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன் மிஷினை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!
images 2022 03 27T170707.420 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.