திருமலையில் நாளை சிபாரிசு தரிசனம் கட்…

Published:

திருமலையில் நாளை சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி நாளை திங்கட்கிழமை சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் 29-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img