November 9, 2024, 7:06 PM
29.6 C
Chennai

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை ஏப்6-மே10 வரை..

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 ல் துவங்கி மே 10 வரை நடைபெற உள்ளது.
சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்6ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மே 10ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மே 10 ம் தேதி வரை மானிய கோரிக்கை நடத்தலாம் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. மதியம் 2 மணி வரை மானிய கோரிக்கைகள் நடக்கும். கேள்வி நேரம் வழக்கம் போல் இருக்கும். அது நேரலையில் நடக்கும் . இவ்வாறு அவர் கூறினார்.

இதன்படி ஏப்6 இல் நீர்வளத்துறை,ஏப்7
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஏப் 8இல் கூட்டுறவு
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஏப்11இல் உயர்கல்வித்துறை,
பள்ளி கல்வித்துறை ஏப்12இல்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
கட்டடங்கள்பொதுப்பணித்துறை,ஏப்13இல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,
கால்நடை பராமரிப்பு,மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் பால்வளம்,ஏப்18இல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,
இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு,ஏப் 19இல் நீதி நிர்வாகம்
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்
சட்டத்துறை,செய்தி மற்றும் வளம்பரம்
எழுதுபொருள் மற்றும் அச்சு,ஏப்20 இல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்,ஏப்21இல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,ஏப்22இல்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,ஏப்25இல்
வனம்- சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை,
ஏப்26 இல் எரிசக்தித் துறை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,ஏப்27இல்தொழில்துறை,தமிழ் வளர்ச்சி( தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை),ஏப்28இல்
கைத்தறி மற்றும் துணிநூல்
கதர் , கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்( கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை)
வணிக வரிகள்(வணிக வரி மற்றும் பதிவுத்துறை)
முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு,
ஏப்29இல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும்.

மே4இல்இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்- நிர்வாகம்( உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)
போக்குவரத்துதுறை
தகவல் தொழில்நுட்பவியல் துறை
மே 5இல்இந்து சமய அறநிலையத்துறை
(சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)
சுற்றுலா- கலை மற்றும் பண்பாடு,
மே 6இல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
மே 7இல் காவல்( உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை)
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்,மே 9இல் காவல்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
திட்டம், வளர்ச்சி மற்றும் முயற்சிகள் துறை,நிதித்துறை
மனித வள மேலாண்மைத்துறை
ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்,மே 10இல்பொதுத்துறை
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை
மாநில சட்டசபை, கவர்னர் மற்றும் அமைச்சரவை,அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும் நடைபெறும்

ALSO READ:  மதுரை மாவட்டத்தில் கன மழை!

author avatar
Dhinasari Reporter

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IND Vs SA T20: சஞ்சு அதிரடியில் அபார வெற்றி பெற்ற இந்தியா!

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் –08.11.2024