images 10 1 - 2026

14 ரெயில்கள் ஏப்1முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன்..

சற்றுமுன்

நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரெயில் (16366),சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை ஏலகிரி ரெயில்
உள்பட 14 விரைவு ரெயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் நாளை ஏப்ரல் 1முதல் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரெயில் (16089), ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரெயில் (16090), நிலம்பூர் சாலை- கோட்டயம் விரைவு ரெயில் (16325), கோட்டயம்- நிலம்பூர் சாலை விரைவு ரெயில் (16326), புனலூர்- குருவாயூர் விரைவு ரெயில் (16327), திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் விரைவு ரெயில் (16843), பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரெயில் (16844), நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரெயில் (16366) உள்பட 14 விரைவு ரெயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு பெட்டிகள் தற்போது முன்பதிவில்லாத பெட்டிகளாக மாறுவதால் இதில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முழு பணத்தையும் திரும்ப பெறலாம். இது தொடர்பாக இந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 10 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.