திருச்செந்தூர் கோயில் நடைமுறை-தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்த, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கர்யம் செய்ய தடை விதித்ததை எதிர்த்தும், தன்னை ‘திரிசுதந்திரர்கள்’ என்ற அடிப்படையில் அனுமதிக்க உத்தரவிடக் கோரியும், சீத்தாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், ‘மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட வி.ஐ.பி.,க்களை மட்டுமே, கோவில் நிர்வாகம் முறைப்படி அனுமதித்து, மரியாதை அளிக்க வேண்டும். திரிசுதந்திரர்கள் கோவிலில் சட்டவிரோதமாக நடந்து கொண்டால், வழக்குப் பதிய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

சுப்பிரமணிய சுவாமி கோவில் சுதந்திர பரிபாலன ஸ்தலத்தார் சபா தலைவர் குமார் அய்யர் தனி நீதிபதி உத்தரவின் சில பகுதிகள், எங்கள் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என, மனு செய்தார்.

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. குமார் அய்யர் மற்றும் சீத்தாராமன் தரப்பு, இது பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல வழக்கு போல் கருதி, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்தது.

தமிழக அரசுத் தரப்பு பக்தர்களை சமமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.

images 22 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories